ஒரு நட்சத்திரப் பூந்தோட்டமாய்
செழித்துக் கமழ்கிறது
கனவுப் பூக்கள்.
பூரணை நிலவின் பேரொளியாய்
நம்பிக்கை வெளிச்சம்
நெஞ்சத்தின் அறைகளுக்குள்
வெள்ளைத் தீந்தை அடிக்கிறது.
வானத்தில் விசிறப்பட்ட
நீலத் திரவமாய்
மனசோடு கலக்கிறது
புதிதாக ஒரு ஊற்று.
ஒவ்வொரு கணமும்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
இராத்திரி வானம்
போதி மரமாக
புதுப் போதனை செய்கிறது.
சில்லென்று தழுவும் பூங்காற்று செழித்துக் கமழ்கிறது
கனவுப் பூக்கள்.
பூரணை நிலவின் பேரொளியாய்
நம்பிக்கை வெளிச்சம்
நெஞ்சத்தின் அறைகளுக்குள்
வெள்ளைத் தீந்தை அடிக்கிறது.
வானத்தில் விசிறப்பட்ட
நீலத் திரவமாய்
மனசோடு கலக்கிறது
புதிதாக ஒரு ஊற்று.
ஒவ்வொரு கணமும்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
இராத்திரி வானம்
போதி மரமாக
புதுப் போதனை செய்கிறது.
உற்சாக பானமாய்
உச்ச போதை கொடுக்கிறது.
ஒரு ஆனந்த நிகழ்வின்
ஆரம்ப விழாவுக்கு
வரவேற்புப் பாடல் பாடிக்கொண்டு
ரெக்கை விரித்துப் பறக்கிறது
ஒரு பட்டுப் பூச்சி.