எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, October 2, 2011

ஒரு நிலா இரவில்...

ஒரு நட்சத்திரப் பூந்தோட்டமாய்
செழித்துக் கமழ்கிறது
கனவுப் பூக்கள்.

பூரணை நிலவின் பேரொளியாய்
நம்பிக்கை வெளிச்சம்
நெஞ்சத்தின் அறைகளுக்குள்
வெள்ளைத் தீந்தை அடிக்கிறது.

வானத்தில் விசிறப்பட்ட
நீலத் திரவமாய்
மனசோடு கலக்கிறது
புதிதாக ஒரு ஊற்று.

ஒவ்வொரு கணமும்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
இராத்திரி வானம்
 போதி மரமாக
புதுப் போதனை செய்கிறது.
சில்லென்று தழுவும் பூங்காற்று
உற்சாக பானமாய்
உச்ச போதை  கொடுக்கிறது.

ஒரு ஆனந்த  நிகழ்வின்
ஆரம்ப  விழாவுக்கு
வரவேற்புப் பாடல் பாடிக்கொண்டு
ரெக்கை விரித்துப் பறக்கிறது
ஒரு பட்டுப் பூச்சி.

Post Comment

7 comments:

bhuvan said...

Nice riphnas...

Mohamed Faaique said...

//சில்லென்று தழுவும் பூங்காற்று
உற்சாக பானமாய்
உச்ச போதை கொடுக்கிறது.///

நல்லாயிருக்கு..

RIPHNAS MOHAMED SALIHU said...

@bhuvan
//Nice riphnas... //

Thank u...

RIPHNAS MOHAMED SALIHU said...

@Mohamed Faaique:

//நல்லாயிருக்கு.. //


Thank u...

MUTHARASU said...

சூப்பர். எளிய நடை... அழகு கவிதை.

RIPHNAS MOHAMED SALIHU said...

@MUTHARASU :
//சூப்பர். எளிய நடை... அழகு கவிதை. //


ரொம்ப நன்றி முத்தரசு...

kavithai (kovaikkavi) said...

''...ஒவ்வொரு கணமும்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
இராத்திரி வானம்
போதி மரமாக..''
மிக நல்ல வரிகள். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன