எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, June 6, 2011

ஊமை வலிகள்

உயிரிலும் 
உடலிலும் 
ஒரு  நூறு  அம்புகள் 
பாய்ந்தாலும் 
இதயம்  ஒருபோதும் 
இடைவேளை  எடுத்ததில்லை .

உணர்வுகளில் 
ஒரு 
சின்ன  நகக்  கீறல் 
விழுந்தால்கூட 
கல்லில்  விழுந்துடையும் 
கண்ணாடிக்குவளை  போல 
சில்லுச்  சில்லாய் 
சிதறுகிறது 
என்  இதயம் .

ஒரே  ஒரு  சொல்தான் .
ஓரிரு  எழுத்துக்கள்தான் 
ஆனபோதும் 
உணர்வுகளின் 
ஒவ்வொரு  அணுக்களையும் 
குத்திப்  பெயர்க்கிறது .


அம்பு  பட்டுத்  துடிக்கும் 
வெண்புறா  போல
இதயத்தின் 
உயிர்  வலிகளில் 
ஒரு  பாசக்  குருவி 
நொந்து  மடிகிறது .

அன்பு  –
எல்லாருக்கும்  பலம் .
எனக்கு  மட்டும் 
அது  பலயீனம் .

என்
பலயீனங்களில் 
அடிக்கடி 
தோற்றுப்  போனாலும்...

பாறையில்  மோதி  அடிபட்டு 
அழுதுகொண்டே 
திரும்பிப்  போகும்   
கடலலைகள் ,
அடுத்த  வினாடியே 
அனைத்தும்  மறந்து 
கரை  தழுவும்   வேகத்தில் 
மறுபடியும்  அடிபடுவதுபோல்,

எத்தனை  முறை 
உணர்வுகளில்
இரும்பு  ஆணிகள் 
ஏற்றப்  பட்டாலும் ,
மீண்டும்  மீண்டும் 
கரை  தழுவித்  தோற்கிறது 
என்  இதய  அலை.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன