எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, June 16, 2011

கோபங்கள்

என் 
ரத்த நாளங்கள்
கொதிக்கின்றன.

என்
மூக்கு நுனி
சிவக்கிறது.

கண்ணில் இருந்து
தீப்பொறி
பறக்கிறது.

கைகளின்
தசைகளுக்குள்
பூச்சிகள் துடிக்கின்றன.

பற்களுக்குள்ளே
யுத்தம் நடக்கிறது.

வெளிப்படுத்த முடியாத
கோபங்கள்
உள்ளுக்குள் கிடந்து
உயிரின் சுவரை
அரிக்கிறது.


Post Comment

2 comments:

Imran Saheer said...

"கைகளின்
தசைகளுக்குள்
பூச்சிகள் துடிக்கின்றன"

அருமையான வரிகள்... பாராட்டுக்கள்.

RIPHNAS MOHAMED SALIHU said...

நன்றி இம்ரான்.... உங்கள் வாழ்த்து மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன