எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, July 5, 2011

வெறுமை


என் நிழல்களே
என்னை விட்டு
விலகியோடுவதுபோல்  
ஒரு பிரம்மை

என் கூடு
என் கண்ணெதிரேயே
உடைந்து போவதாய்
ஒரு காட்சி .

என் உறவுகள்
என்னை விட்டு
ரொம்ப தூரம்
விலகி நிற்பதாய்
ஒரு தோற்றம் .

என் கைகளிலிருந்து    
எல்லாமே
நழுவிப் போகின்றன.

நான்,
வெறுமையாகிறேன்.

விருப்பு வெறுப்புக்களோ
கோப தாபங்களோ
எதுவுமே இல்லை
என்னிடம்.

வெற்றுடம்பில்
உணர்ச்சிகள் மரத்துப் போன
ஒரு உயிர் மட்டும்
இருக்கிறது
இன்னும் பிரியாமல்.

இருக்கிறது....
வைக்கோலைப் போல
உப்புச் சப்பற்ற
ஓர் ஆத்மா.

வறண்டு,
பாலைவனம் போல
ஓர் ஆத்மா.

போதும் -
இந்த
சுடுகாட்டு ஜீவியம்.

வெகு தூரத்தில்,...
 முகம் தெரியாத மனிதர்களுக்கிடையில்
முகமற்றவளாய்
வாழத் தோணுகிறது.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன