எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, July 28, 2011

விடிகாலைத் தூக்கம்

விடிகாலைப் பொழுது
விழியில் ஓர் கனவு
அழகான கவிதை
அரங்கேறும் உணர்வு

மேகம் தேடிவந்தென்
வாசலிலே பனிப்பொழிய
சேமம் சொல்லிக்கொண்டு
வீடு செல்லும் வானிலவு

நட்சத்திரம் வந்தென்
முற்றத்திலே பூப்பூக்கும்
நல்லதொரு வீணை
மெல்லியதாய் பா இசைக்கும்

அதிகாலைக் குளிரெந்தன்
இருதயத்தில் பசை தடவும்
அசந்த நித்திரையில்
அரைகுறையாய் குயில்  மயக்கும்

அரைத் தூக்கம் கலைந்தபின்னும்
விழி தூங்க அடம் பிடிக்கும்
விலகிய போர்வை நீண்டு
தலை வரைக்கும் பாய் விரிக்கும்

கனவு கலைந்து மீண்டும்
கண்ணயர்ந்து போகையிலே
அயல் கிடக்கும் தொ(ல்)லைபேசி
அலார இடி முழக்கும்

திடுக்கிட்டு உயிர் விழிக்கும்
திகிலொன்றில்  மனம் பதைக்கும்
விடிந்துட்டா என்று நெஞ்சு
விடியலை வைது  தீர்க்கும்

விழித்திட விழி மறுக்கும்
விழிகளில் துயில் வலிக்கும்
அடுத்ததும் சில நிமிடம்
அசந்திட மனம் அழைக்கும்

திரும்பவும் போர்வை போர்த்தி
விரும்பியே துயில் நடக்கும்
பல மணித் துயிலை விட - அந்தச்
சில நிமிடம் தித்திக்கும்.

Post Comment

4 comments:

Unknown said...

நல்லா இருக்கு...திரட்டிகளில் இணையுங்கள் அப்போது தான் பலரை சென்றடையும் உங்கள் கவிதைகள்
!!!

RIPHNAS MOHAMED SALIHU said...

மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் ஆலோசனைக்கும் ... மீண்டும் வருக ..

ரிஷபன் said...

நட்சத்திரம் வந்தென்
முற்றத்திலே பூப்பூக்கும்
நல்லதொரு வீணை
மெல்லியதாய் பா இசைக்கும்

ஆஹா.. வாசிக்கும்போதே அதன் சுகானுபவம் மனசுக்குள்.

திரும்பவும் போர்வை போர்த்தி
விரும்பியே துயில் நடக்கும்
பல மணித் துயிலை விட - அந்தச்
சில நிமிடம் தித்திக்கும்.

நிதர்சனமான வரிகள்

RIPHNAS MOHAMED SALIHU said...

நன்றி நண்பரே... உங்கள் வார்த்தைகள் உற்சாகமூட்டுகின்றன. தொடர்ந்தும் இணைந்திருங்கள்...

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன