எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, May 19, 2011

என் பேனா முனை

இந்தப்  பேனா!

இதுதான் 

என்னை -

எழுத்துக்  கடலுக்குள் 

அமிழ்த்தி  எடுப்பது .



ஒன்று  சொன்னால் 

ஆச்சரியப்படுவீர்கள் .



என்  மூளையை  விடவும் 

அதிகமாய்ச்  சிந்திப்பது 

என்  பேனா  முனைதான் .



பேனாவின்  மூடி  திறக்கும்வரை 

நானொரு 

ஞானசூன்யம்.



காகிதமும்  என்  பேனாமுனையும் 

கை குலுக்கிக் கொண்டபின்தான் 

என் அறிவும் ஹோர்மோன்களும் 

சுரந்துகொள்கின்றன.



சிலவேளைகளில் 

எனக்குக்  கவிதை  வரும்.

ஆனால்,

எழுத  வராது.



சிலவேளைகளில்  

எனக்கு  எழுத  வரும்.

ஆனால்,

கவிதை  வராது .



கவிதையும்  எழுத்தும் 

ஒன்றாய்  வரும்போது 

இந்தப்  பேனாமுனைதான் 

என்  உணர்ச்சிகளை 

சாறு  பிழியும்.



அந்தத் 

துளித் துளிகள்தான் 

கவித் துளிகளாய் 

மொழி  மாறும் .

2002

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன